செய்திகள்

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது: 5 வீரர்கள் கதி என்ன?

Published On 2017-08-17 08:03 GMT   |   Update On 2017-08-17 08:03 GMT
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 5 வீரர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை.
கெயனா:

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு பகுதியில் அமெரிக்க கடற்படை முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று கெயனா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.

திடீரென அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பில் இருந்து மாயமாகி விட்டது. எனவே, விமானம் கீழே விழுந்திருக்கலாம் என கருதி கடல் மற்றும் நில பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் பெரும் பகுதி கடலில் மூழ்கி கிடக்கலாம் என தெரிகிறது.

இந்த ஹெலிகாப்டரில் 5 வீரர்கள் சென்றனர். அவர்கள் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. 5 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுவரை உடல் எதுவும் கிடைக்கவில்லை.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஓ.எச்-60 பிளாக் ஹவாக் வகையை சேர்ந்ததாகும். என்ன காரணத்தால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது என்பது தெரியவில்லை.
Tags:    

Similar News