செய்திகள்

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்கா அறிக்கை

Published On 2017-08-16 18:24 GMT   |   Update On 2017-08-16 18:24 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கமானது, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை மூலைச்சலவை செய்து தங்களது தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதன் இணையதளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்ளும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இயக்கத்தின் தளபதியாக உள்ள சையது சலாஹுதீனை சர்வதேச தீவிரவாதி எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News