செய்திகள்

இலங்கையில் வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா பதவி ஏற்பு

Published On 2017-08-16 00:15 GMT   |   Update On 2017-08-16 00:15 GMT
இலங்கையில் புதிய வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா நேற்று அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றார்.
கொழும்பு:

இலங்கை வெளியுறவு துறை மந்திரியாக இருந்தவர் ரவி கருணாநாயகே. அரசு பத்திர விற்பனையில் ஊழலில் தொடர்பு இருப்பதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரவி கருணாநாயகே தன்னுடைய மந்திரி பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அந்நாட்டு புதிய வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா நேற்று அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றார். வக்கீலான அவர் அட்டார்னி ஜெனரலாக இருந்தவர். மேலும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் சட்ட ஆலோசகர் குழுவிலும் இருந்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் திலக் மரபோனா, ஏற்கனவே ராணுவ மந்திரியாகவும், சட்டத்துறை மந்திரியாகவும், சிறப்பு அமலாக்கத்துறை மந்திரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News