செய்திகள்

சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதி

Published On 2017-08-05 09:42 GMT   |   Update On 2017-08-05 09:42 GMT
சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்தார்.
ரியாத்:

சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது.

புதிய திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையில் அதிநவீன சொகுசு ஓட்டல் கட்டப்படுகிறது. மிக பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் கட்டப்படும் இந்த ஓட்டல் திட்ட வரையறைகளை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று வெளியிட்டார்.

அப்போது இந்த கடற்கரை ஓட்டலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய விதிமுறைகளையும் வெளியிட்டார். அதன்படி பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ‘‌ஷரியத்’ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வெளியில் வரும் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
Tags:    

Similar News