செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும்: புதின் அதிரடி

Published On 2017-07-27 19:54 GMT   |   Update On 2017-07-27 19:54 GMT
அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:

பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய அவர், “நாங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் நடந்து வருகிறோம். ஆனால் சில நிகழ்வுகளில் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இது சர்வதேச உறவுகள் மற்றும் சட்டங்களை அழிக்கிறது” என்றார்.

Tags:    

Similar News