செய்திகள்

துபாயில் இந்திய ஊழியர் மாரடைப்பால் மரணம்: நாடு திரும்ப தயாராக இருந்தபோது உயிரிழந்த சோகம்

Published On 2017-07-25 14:37 GMT   |   Update On 2017-07-25 14:37 GMT
துபாயில் நாடு திரும்ப ஆயத்தமான இந்தியர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
துபாய்:

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் அசோகன்(வயது 46). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தார். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்த அவர், வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த அசோகன், நேற்று துபாயில் இருந்து விமானத்தில் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் கம்பெனியின் செட்டில்மென்ட் பேப்பர்களில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக கம்பெனியின் மனிதவளப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். ‘அசோகன் மரணம் அடைந்ததால் துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று கம்பெனிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசோகன் மரணம் குறித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

அசோகன் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த அதிகாரி மறுத்துள்ளார். 
Tags:    

Similar News