செய்திகள்

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் - தபால் ஓட்டு முறைக்கு மந்திரி ஆலோசனை

Published On 2017-07-23 09:24 GMT   |   Update On 2017-07-23 09:24 GMT
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் ஓட்டு முறையை நடத்தலாம் என ஆஸ்திரேலியா நாட்டின் மூத்த மந்திரி தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு மந்திரிகளில் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு 61 சதவீதத்தினர் தங்களது ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை மற்றும் உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் கூறுகையில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு தபால் ஓட்டுகள் மூலம் ஆதரவு கோரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அரசில் அங்கம் வகிக்கும் மூத்த மந்திரியின் இந்த பரிந்துரையை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் செய்து வருகின்றன.
Tags:    

Similar News