செய்திகள்

எகிப்து: பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் அதிபயங்கர 30 தீவிரவாதிகள் பலி

Published On 2017-07-22 05:33 GMT   |   Update On 2017-07-22 06:02 GMT
எகிப்து நாட்டில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய 30 ஐ.எஸ் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் நடத்திய சிறப்பு ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:

எகிப்து நாட்டில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய 30 ஐ.எஸ் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் நடத்திய சிறப்பு ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள சினாய் மலைப்பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கிருந்தபடியே எகிப்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இம்மாதத்தில் அங்கு நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், தீவிரவாதிகளை ஒழித்திக்கட்ட அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சிறப்பு ஆபரேஷன் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

நேற்று, சினாய் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் அங்கு பதுங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட அனைத்து தீவிரவாதிகளும் மிக பயங்கரமானவர்கள் என்றும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News