செய்திகள்

மிகச்சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது: அதிபர் டிரம்ப்

Published On 2017-06-26 20:50 GMT   |   Update On 2017-06-26 20:50 GMT
வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணியளவில் வெள்ளை மாளிகை சென்றடைந்தார். அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்பு கம்பளம் வரவேற்று அளிக்கப்பட்டது. அத்துடன் பிரதமர் மோடியை டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து வரவேற்றார்.



அப்போது மிகச்சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டினார். இந்த வரவேற்று எனக்கு அளித்த வரவேற்பு அல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கான வரவேற்று என்று மோடி கூறினார்.



இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். குறிப்பாக எச்-1பி விசாவால் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News