செய்திகள்

இந்தோனேசியா: போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தி கொன்ற ஐ.எஸ் தீவிரவாதி

Published On 2017-06-25 05:43 GMT   |   Update On 2017-06-25 05:43 GMT
இந்தோனேசியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை ஐ.எஸ் தீவிரவாதி கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜகார்தா:

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு இந்தோனேசியாவில் தற்போது ரம்ஜான் பண்டிகை என்பதால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேதான் நகரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதனையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் அதிகாரியை தாக்கிய தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களில் நாடுமுழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி 40 ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக தேசிய போலீஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News