செய்திகள்

முதலீட்டாளர்கள் நெருக்கடி: உபேர் கால் டாக்ஸி நிறுவனர் டிராவிஸ் கலாநிக் ராஜினாமா

Published On 2017-06-21 06:32 GMT   |   Update On 2017-06-21 06:32 GMT
முதலீட்டாளர்கள் நெருக்கடியால் உபேர் கால் டாக்ஸி நிறுவனர் டிராவிஸ் கலாநிக், தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் பிரபர கால் டாக்ஸி நிறுவனம் உபேர். உபேர் கால் டாக்ஸியின் துணை நிறுவனரான டிராவிஸ் கலாநிக், நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியும் வகித்து வந்தார். 

இந்நிலையில், டிராவிஸ் கலாநிக், தனது தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது. உபேர் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் முதலீட்டாளர்கள் அளித்த நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

உபேர் நிறுவனத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் சிலர் “Moving Uber Forward” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தனர். அதில், தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து கலாநிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். இருப்பினும் உபேர் குழுமத்தின் ஒரு பொறுப்பில் அவர் தொடர்வார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த போது, அவரது வர்த்தக ஆலோசனை குழுவில் இருந்து டிராவிஸ் கலாநிக் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News