செய்திகள்

சவுதி இளவரசர் பதவியில் இருந்து அப்துல்யாஸிஸ் நீக்கம் - புதிய இளவரசர் முகமது பின் சல்மான்

Published On 2017-06-21 04:51 GMT   |   Update On 2017-06-21 04:51 GMT
சவுதி இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ் நீக்கப்பட்டார். புதிய இளவரசராக மகன் முகமது பின் சல்மானை சவுதி நாட்டின் மன்னர் அறிவித்துள்ளார்.
ரியாத்:

சவுதி இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ்(57) நீக்கப்பட்டார். புதிய இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிய இளவரசரை தேர்வு செய்வது தொடர்பாக மக்காவில் உள்ள அல் சபா மாளிகையில் சவுதி அரசரின் வரிசு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 43 உறுப்பினர்களில் 31 பேர் முகமது பின் சல்மானுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து, முகமது பின் சல்மானை புதிய இளவரசராக அவரது தந்தையும் சவுதி அரசருமான சல்மான் பின் அப்துலாஸிஸ் அல் சவுத் நியமித்தார். 

31 வயதான முகமது பின் சல்மான் மேலும் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதனோடு, தான் பொறுப்பு வகித்து வந்த பாதுகாப்பு துறை மந்திரி பதவியையும் தக்க வைத்துள்ளார்.

முன்னதாக முகமது பின் சல்மான் துணை இளவரசராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News