செய்திகள்

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுவனை அடித்துக்கொன்ற கரடி

Published On 2017-06-20 10:48 GMT   |   Update On 2017-06-20 10:48 GMT
மலை மீது ஓடும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுவனை புதரில் மறைந்து இருந்த கரடி ஒன்று அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலாஸ்கா:

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அன்சோர்ச் பகுதியை சேர்ந்தவன் பாட்ரிக் கூப்பர் (16). அன்சோர்சில் இருந்து கிரிட்வுட் பகுதிக்கு மலை மீது ஓடும் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் இவன் பங்கேற்றான்.

குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்த பின் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தான். மிகவும் உள்ளடங்கிய பகுதியில் வந்த போது புதருக்குள் இருந்து வெளியே வந்த கரடி அவனை துரத்தியது.

இதனால் பயந்த அவன் தனது பெற்றோருக்கு அதுபற்றி செல்போனில் தகவல் அனுப்பினான். உடனே போட்டி அமைப்பாளர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு துப்பாக்கியுடன் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த கரடி சிறுவன் பாட்ரிக்கை அடித்து கொன்றது. உடனே அதன் முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அக்கரடி காயத்துடன் உயிர்தப்பியது.

கரடி அடித்துக் கொன்ற சிறுவனின் உடல் ஹெலி காப்டர் மூலம் அங்கிருந்து கொண்டு வரப்பட்டது. சிறுவனை கொன்ற கரடி 113 கிலோ எடை இருக்கும். அதை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News