செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ராணுவ முகாம் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி

Published On 2017-06-20 08:56 GMT   |   Update On 2017-06-20 09:25 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் பணியாற்றி வரும் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து, அந்நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் மாவட்டத்தில் ஆப்கன் வீரர்களுடன் சேர்ந்து அமெரிக்க ராணுவ படையினர் முகாம் அமைத்து செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ முகாமில் பணியாற்றுவதற்காக ஆப்கன் வீரர்கள் நேற்று இரவு கும்பலாக சென்றனர்.

அப்போது, அவர்களை இடைமறித்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் எட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News