செய்திகள்

இந்தியா தாக்குதல் நடத்தியதா? - பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மறுப்பு

Published On 2017-05-24 04:29 GMT   |   Update On 2017-05-24 04:29 GMT
எங்கள் ராணுவ முகாம்களை அழித்ததாக இந்தியா கூறுவது பொய்யான தகவல் ஆகும் என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருந்த தீவிரவாதிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று டெல்லியில் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் பல முற்றிலுமாக அழிக்கப்பட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதை பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பு டைரக்டர் ஜெனரல் ஆசிப் காபூர் மறுத்தார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள நஷ்ஷெரா செக்டாரில் இருந்து பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறி இருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Tags:    

Similar News