செய்திகள்

137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான 2-வது நாள் ஏப்ரல் 17-ந்தேதி

Published On 2017-05-17 06:21 GMT   |   Update On 2017-05-17 06:21 GMT
137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான 2-வது நாளாக ஏப்ரல் 17-ந்தேதி இருந்தது.
நியூயார்க்:

தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பதிவான வெப்பம் குறித்து சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள 6,300 வானிலை மையங்களில் பதிவான வெப்பம் கணக்கிடப்பட்டது. அதில் கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 17-ந்தேதி அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ளது.

அன்று வடமேற்கு கனடா, கலாஸ்கா (அமெரிக்கா), ரஷியாவில் உள்ள சைபீரியாவின் பெரும்பகுதி, வடக்கு சீனா, மற்றும் மங்கோலியாவில் வழக்கத்தை விட அதிக அளவு வெப்பம் பதிவாகி இருந்தது.

இது கடந்த 137 ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான 2-வது நாளாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் இதைவிட சிறிது குறைந்த அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது.

எனவே அது அதிக வெப்பம் பதிவான 3-வது நாளாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News