செய்திகள்

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டருக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு

Published On 2017-04-28 06:48 GMT   |   Update On 2017-04-28 06:48 GMT
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டருக்கு யுனைடெட் ஏர் லைன்ஸ் நிறுவனம் ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்கியது.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள கென்டக்கியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் தயோ (69). இவர் அமெரிக்க வாழ் வியட்நாமியர் ஆவார். இவர் சிகாகோவில் இருந்து லூயிஸ் வில்லேவுக்கு விமானத்தில் புறப்பட்டார். இருக்கை வசதி இல்லாததால் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.

ஆனால் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க இருப்பதால் வெளியேற முடியாது என மறுத்தார். எனவே அவர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப்பட்டார். அக்காட்சி இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு யுனைடெட் ஏர் லைன்ஸ் நிறுவனம் டாக்டர் டேவிட் தயோவுக்கு நஷ்டஈடு வழங்க முன் வந்தது. அதன் படி அவருக்கு ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.

Similar News