செய்திகள்

சீனாவின் முதல் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Published On 2017-04-09 14:45 GMT   |   Update On 2017-04-09 14:46 GMT
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள முதல் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
பீஜிங்:

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வேலை செய்து செய்து வரும் 70 தமிழர்கள் 2013-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று ‘பீஜிங் தமிழ் சங்கமம்’ என்ற அமைப்பினை உருவாக்கினார்கள். இதுதான் சீனாவின் முதல் தமிழ் சங்கம்.

இந்த அமைப்பின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், சங்கத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் தொழிலாளர்களுடன், பல்வேறு பல்கலைக் கழகங்களில் படித்து வரும் மாணவர்கள், பீஜிங்கை சுற்றியிருக்கும் தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர். சீனா ரேடியோ இண்டர்நேஷனலின் தமிழ் பிரிவில் இடம்பிடித்துள்ள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Similar News