செய்திகள்

அமெரிக்காவில் தாறுமாறாக ஓடிய வேன் மோதி இந்திய என்ஜினீயர் மரணம்

Published On 2017-03-30 06:57 GMT   |   Update On 2017-03-30 06:57 GMT
அமெரிக்காவில் தாறுமாறாக ஓடிய வேன் மோதி இந்திய என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் இன்டியானா மாகாணம் கொலம்பஸ் நகரில் உள்ள டீசல் என்ஜின் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அன்சுல் சர்மா (வயது 30) என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

அவர் தனது மனைவி ‌ஷமீரா (28)வுடன் பர்த் லோமி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது தாறுமாறாக ஓடி வந்த மினி வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், அன்சுல் சர்மா அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். ‌ஷமீரா படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்கள் மீது மோதிய வேன் நிற்காமல் சென்று விட்டது. போலீசார் விரட்டி சென்று அந்த வேனை மடக்கி பிடித்தனர். வேனை ஓட்டி வந்த மைக்கேல் டேமியா (38) என்பவரை கைது செய்தனர்.

இறந்த அன்சுல் சர்மாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவருடைய உறவினர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Similar News