செய்திகள்

ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3500 குற்றச்சாட்டுகள் பதிவு

Published On 2017-02-26 14:37 GMT   |   Update On 2017-02-26 14:37 GMT
ஜெர்மனியில் தங்கி இருக்கும் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்லின்:

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால் அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குகுலக நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர்.

பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேற்கு நாடுகளில் அகதிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு தயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது.

இந்நிலையில், ஜெர்மனியில் முகாம்களில் தங்கி இருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சம் அடைந்தோர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளானவர்களில் 43 பேர் சிறுவர்கள்.



முன்னதாக ஜெர்மனி நாடானது 2016-ம் ஆண்டில் மட்டும் 2,80,000 அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ளது. ஆனால் 2015-ல் அனுமதி அளித்ததை விட இது 68 சதவீதம் குறைவு ஆகும். 2015-ல் 8,90,000 அகதிகளுக்கு ஜெர்மன் அரசு தஞ்சம் அளித்தது.

Similar News