செய்திகள்
கோப்புப்படம்

அதிநவீன ராக்கெட்களை செலுத்தி ஈரான் ராணுவ ஒத்திகை

Published On 2017-02-20 09:16 GMT   |   Update On 2017-02-20 09:16 GMT
அமெரிக்காவின் தடையை மீறி ராணுவ ஒத்திகையின்போது இன்று அதிநவீன ராக்கெட்களை செலுத்திய ஈரான் அரசின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஹ்ரான்:

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைக்கு இலக்கான ஈரான் சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்தது. இந்த சோதனைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டு மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில் அந்நாட்டு ராணுவத்தின் மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை இன்று தொடங்கியது. இன்றைய ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன ராக்கெட்டை ஏவி பரிசோதித்தது. பரிசோதிக்கப்பட்ட ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News