செய்திகள்

சோமாலியாவில் மார்க்கெட்டில் கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

Published On 2017-02-20 05:54 GMT   |   Update On 2017-02-20 05:54 GMT
சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர்.
மொகாடிசு:

சோமாலியா தலைநகர் மொசாடிசுவில் நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள். நேற்று அங்கு ஒரு கார் அதிவேகமாக வந்தது.

பின்னர் காரில் வந்த நபர் அதில் குவித்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இதனால் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் அந்த மார்க்கெட் முழுவதும் அடியோடு இடிந்து தரை மட்டமானது. அங்கிருந்த கடைகள். கட்டிடங்கள் அழிந்தன. இத்தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலியாகினர்.

50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சோமாலியாவில் இந்த மாதம் தான் புதிய அதிபராக முகமது அப்துல்லாகி முகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல்‌ஷ பாப் தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மார்க்கெட்டில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Similar News