செய்திகள்

வடக்கு மாகாண தமிழர்களுக்கு உடனடியாக நிலங்களை வழங்க வேண்டும்: இலங்கை சிவில் சமூக குழு

Published On 2017-02-18 00:58 GMT   |   Update On 2017-02-18 00:58 GMT
வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு உடனடியாக நிலங்களை வழங்க வேண்டும் என்று இலங்கை சிவில் சமூக குழுக்கள் வலியுறுத்தி உள்ளது.
கொழும்பு:

இலங்கையில், உள்நாட்டுப் போரின்போது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கப்படும் என அந்நாட்டின் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும் அந்த பணிகள் அவ்வளவாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், இலங்கையில், உள்நாட்டுப் போரின் போது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கப்படும் என்று அந்நாட்டின் இலங்கை சிவில் சமூக குழு வலியுறுத்தி உள்ளது.

இந்த குழுவினர் புதுகுடியிருப்பு வடக்கு போர் பகுதியில் கேப்பபிளவில் உள்ள வடக்கு போர் பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகாம்களை இலங்கை அரசு தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கான அறிகுறிகள் கேப்பபிளவு உள்ள நிலைமைகள் காட்டுகிறது. ராணுவ பிடியில் இருந்து தமிழர்களுக்கு நிலங்களை வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News