செய்திகள்

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்

Published On 2017-01-17 06:02 GMT   |   Update On 2017-01-17 06:02 GMT
2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன்:

சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. ஆனால் அவை மக்கும் தன்மை அற்றதாக இருப்பதால் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.

1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு கடந்த 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. எனவே அதை உடனடியாக சரி செய்யா விடில் வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆகவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இங்கிலாந்தின் தவோஸ் நகரில் நடந்தது. அதில் இந்தியா உள்பட உலகின் முன்னணி தொழிற்சாலைகளின் அதிபர்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.

தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News