செய்திகள்

வளர்ப்பு நாயைக் காப்பாற்ற கங்காருவைத் தாக்கிய நபர்: வைரல் வீடியோ

Published On 2016-12-08 08:35 GMT   |   Update On 2016-12-08 09:45 GMT
வளர்ப்பு நாயைக் காப்பாற்ற அதன் உரிமையாளர் கங்காருவைத் தாக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு கிரெய்க் டோன்கின்ஸ்(34) என்ற யானை பராமரிப்பாளர் தனது வளர்ப்பு நாயுடன் சுற்றுலா சென்றார்.

அங்கு இவரின் வளர்ப்பு நாய் கங்காரு ஒன்றிடம் சிக்கிக்கொண்டது. கங்காரு நாயின் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டதால் நாயால் தப்பிக்க முடியவில்லை. நாயைத் தேடி ஜீப்பில் சென்ற கிரெய்க் கங்காருவின் பிடியில் நாய் சிக்கித் தவிப்பதைப் பார்த்து ஜீப்பிலிருந்து இறங்கி வேகமாக ஓடினார். கிரெய்க் ஓடி வருவதைப் பார்த்தும் அந்த கங்காரு நாயை விடவில்லை.

இந்நிலையில் கங்காருவின் அருகில் சென்ற கிரெய்க் அதன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட இதில் கதி கலங்கிப போன கங்காரு அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓடி விட்டது. கிரெய்க்கின் இந்த செயலை பலர் பாராட்டினாலும் மிருக ஆர்வலர்கள் இவரின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 24,569,634 பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக் காண:


Similar News