செய்திகள்

இஸ்தான்புல் நகரில் ரஷியா கப்பல் தரைதட்டி சாய்ந்தது: 14 பேர் மீட்பு

Published On 2016-12-03 05:30 GMT   |   Update On 2016-12-03 06:08 GMT
சூறைக்காற்றில் சிக்கிய ரஷியா நாட்டின் சரக்கு கப்பல் இஸ்தான்புல் நகரின் அருகே கடற்கரையில் தரைதட்டி, சாய்ந்தது.
இஸ்தான்புல்:

ரஷியாவுக்கு சொந்தமான வோல்கோடோன்-203 என்ற சரக்கு கப்பல் துருக்கி நாட்டில் உள்ள இஸ்மிர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, கருங்கடல் வழியாக திரும்பிக் கொண்டிருந்தது. அந்த கப்பலில் மாலுமி, துணை மாலுமிகள் உள்பட 14 பேர் இருந்தனர்.

துருக்கி நாட்டு தலைநகரான இஸ்தான்புல் அருகே கர்ட்டால் மாவட்டத்தையொட்டிய கடல்பகுதி வழியாக வந்தபோது, உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு சுமார் 9 மணியளவில் கடலில் எழுந்த சூறைக்காற்றில் சிக்கிய அந்த கப்பல், காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கரையைநோக்கி நகர்ந்துவந்து, தரைதட்டி, சாய்ந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த துருக்கி நாட்டு மீட்புக் குழுவினர் அந்தக் கப்பலில் சிக்கியிருந்த 14 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல், தரைதட்டிய மற்றொரு சரக்கு கப்பலில் இருந்தவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News