செய்திகள்

இலங்கையில் நடைபெறும் சித்ரவதைகள்: மனித உரிமைகள் கமிஷன் அறிக்கை தாக்கல்

Published On 2016-11-03 03:23 GMT   |   Update On 2016-11-03 03:23 GMT
இலங்கையில் கொள்ளை, போதை மருந்து கடத்தல், தாக்குதல், குடும்ப தகராறு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் சித்ரவதைக்கு ஆளாகி தண்டிக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் கமிஷன் ஐ.நா. சபையின் குழுவுக்கு ஆய்வறிக்கை அனுப்பி இருக்கிறது.
கொழும்பு:

இலங்கையில், கைது செய்யப்படுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் புகார் கூறியுள்ள பல்வேறு நாடுகள், இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை மனித உரிமைகள் கமிஷன் ஐ.நா. சபையின் சித்ரவதைகளுக்கு எதிரான குழுவுக்கு ஆய்வறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், இலங்கையில் கொள்ளை, போதை மருந்து கடத்தல், தாக்குதல், குடும்ப தகராறு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் சித்ரவதைக்கு ஆளாகி தண்டிக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவும், விசாரணையின் போது மட்டுமல்லாமல் கைது செய்யப்படும் போதே சித்ரவதை செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

சித்ரவதைகள் தொடர்பாக கடந்த ஆண்டில் 420 புகார்கள் வந்து இருப்பதாகவும், இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 208 புகார்கள் வந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Similar News