செய்திகள்

மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு

Published On 2016-10-28 05:38 GMT   |   Update On 2016-10-28 05:38 GMT
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது அண்டைநாடான ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
ரியாத்:

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News