செய்திகள்

ஹைமா புயலால் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 16 லட்சம் மக்கள் பாதிப்பு

Published On 2016-10-23 12:36 GMT   |   Update On 2016-10-23 12:36 GMT
சீனா தென் பகுதியை தாக்கிய ஹைமா தைபூன் புயாலால் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீஜிங்:

பிலிப்பைன்ஸ் நாட்டை தொடர்ந்து சீனாவின் தென் பகுதியை ஹைமா தைபூன் புயல் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக தாக்கியது. இதில் குவாங்டாங் மாகாணம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் சீனாவை தாக்கிய ஹைமா புயலுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.



சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பான எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

2,749 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகின. 517 மில்லியன் டாலர் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிவில் விவகாரங்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பை தொடர்ந்து சீன அரசு துரிதமாக பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் சனிக்கிழமை அன்றே 95.5 சதவீதம் மின்சார பாதிப்பு சீரமைக்கப்பட்டது.

Similar News