செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய ரகசிய ஆவணங்களை வெளியிட போவதாக விக்கிலீக்ஸ் அறிவிப்பு

Published On 2016-10-04 17:00 GMT   |   Update On 2016-10-04 17:00 GMT
அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவாக உள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே இண்ட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து காணொளி காட்சி வழியாக அசாஞ்சே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த தகவல்கள் வாக்களிக்கும் நாளான நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

Similar News