செய்திகள்

தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்ட என்ஜினியர்

Published On 2016-09-22 20:15 GMT   |   Update On 2016-09-22 20:15 GMT
இங்கிலாந்து நாட்டில் என்ஜினியர் ஒருவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்டார்.


இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் கிரகாம் ஸ்மித். என்ஜினியரான இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது.

ஆனாலும் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை தீராமலே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் இரத்த கசிவும் ஏற்பட்டது. உடனே மருத்துவரை அணுகிய அவர் தனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யும் படி கேட்டார்.

ஆனால் மருத்துவர் கிரகா ஸ்மித்துக்கு வேறு நாளில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய போவதாக கூறி ஏற்கனவே சிகிச்சைகாக காத்திருப்போர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்துள்ளார்.

இதனால் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்த ஸ்மித் அந்த விபரீத செயலை செய்தும் கொண்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், மருத்துவர் சொன்ன தேதி வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. நானே கத்தியை எடுத்து பாதிப்புள்ள பகுதியை கிழித்தேன்.

பின்னர் உள்ளே இருந்த 8 மி.மீ நைலான் நூலை வெளியில் எடுத்து அந்த இடத்தில் 12 தையல்களை போட்டேன். இப்போது நல்ல ரிலாக்சாக உணர்கிறேன்.

நான் ஒன்றும் மருத்துவரில்லை, ஆனாலும் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மருத்துவம் தெரியாத ஒருவர் இப்படிபட்ட செயலில் ஈடு படுவது தவறாகும் மற்றும் கண்டணத்துக்குரியதாகும் என பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் முன்பு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிர்வாகமே தானாக முன்வந்து அவர் உடல் நிலையை பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News