செய்திகள்

ஈராக்கியில் துருக்கி ராணுவம் தாக்குதல்: 4 குர்திஷ் தீவிரவாதிகள் பலி

Published On 2016-09-20 14:33 GMT   |   Update On 2016-09-20 14:33 GMT
வடக்கு ஈராக்கில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் குர்திஷ் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்தான்புல்: 

துருக்கியில் அரசுக்கும் குர்திஷ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் நீடிக்கிறது. எனவே, அண்டை நாடுகளில் குர்து இன  மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கும் குர்திஷ் தீவிரவாதிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல்  நடத்தி வருகிறது. 

இந்நிலையில், வடக்கு ஈராக்கில் குர்திஷ் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து துருக்கி ராணுவம் இன்று குண்டுவீசி  தாக்குதல் நடத்தியது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சிர்னாக்  மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குர்திஷ் தீவிரவாதிகளின்  ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதுபோன்று எல்லைதாண்டிய நடவடிக்கைகளில் துருக்கி தொடர்ந்து ஈடுபடுவதாகவும், இது நாட்டின் பிராந்திய  இறையாண்மையை மீறுவதாகவும் ஈராக்கில் உள்ள குர்திஷ் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News