செய்திகள்

உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமனம்

Published On 2016-08-25 07:16 GMT   |   Update On 2016-08-25 07:16 GMT
உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.

உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். உலக வங்கியின் 12-வது தலைவராக பொறுப்பு வகித்துவரும் இவரது நான்காண்டு பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த நான்காண்டுகளுக்கும் இவரையே உலக வங்கியின் தலைவராக நியமிப்பதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  அமெரிக்காவின் நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல் லியூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உலக வங்கியின் தலைவராக தனது பதவிக்காலத்தில் தற்போது உலகை அச்சுறுத்தும் பல்வேறு சவால்களை திறம்பட சமாளித்தும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கவும் தனது முதலாம் பதவிக்காலத்தில் சிறப்பாக செயலாற்றிய ஜிம் யாங் கிம்-ஐ மீண்டும் இப்பதவியில் நியமிப்பதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டுவந்த முக்கிய முன்முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற முடியும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News