செய்திகள்

அமெரிக்க போர்க் கப்பல் மீது மோதவந்த ஈரான் கப்பல்கள்: அரபி பெருங்கடல் பகுதியில் பதற்றம்

Published On 2016-08-25 05:49 GMT   |   Update On 2016-08-25 05:50 GMT
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக சென்ற அமெரிக்க போர்க் கப்பல் மீது ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் படுவேகமாக மோதுவதுபோல் வந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ’யூ.எஸ்.எஸ்.நிட்ஸே’ என்ற போர்க்கப்பல் வந்த பாதை வழியே மிக வேகமாக வந்த ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த 4 கப்பல்களில் இரு கப்பல்கள் ’யூ.எஸ்.எஸ்.நிட்ஸே’ மீது மோதுவதுபோல் வந்த சம்பவத்தை மிக ஆபத்தானதாகவும், தொழில்முறை பாதுகாப்பை மீறிய அச்சுறுத்தலாகவும் கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Similar News