தமிழ்நாடு

தூத்துக்குடி தொழிலாளி கொலையில் 2 வாலிபர்கள் கைது

Published On 2023-12-12 10:01 GMT   |   Update On 2023-12-12 10:01 GMT
  • நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
  • தலைமறைவான சக்தி என்ற பறவையை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் ஜெகன்ராஜ் (வயது30). கூலி தொழிலாளி.

நேற்று மதியம் லேபர் காலனியில் ஜெகன்ராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஜெகன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்தவர்கள் ஜெகன்ராஜை சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தினர்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அப்பகுதியை சேர்ந்த நவநீதன், செல்வம் (29) மற்றும் சக்தி என்ற பறவை (27) ஆகியோர் ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நவநீதன், சக்தி என்ற பறவை என்பவர் மூலம் ஜெகன்ராஜிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதனை ஜெகன்ராஜ் திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சக்தி என்ற பறவையையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News