தமிழ்நாடு

என்.ஆர்.ஐ. மாணவர்களை ஏமாற்றும் போலி இ-மெயில்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

Published On 2022-06-10 10:53 GMT   |   Update On 2022-06-10 10:53 GMT
  • என்.ஆர்.ஐ. மாணவர்களை குறி வைத்து அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள் போலியானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
  • மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்டும்.

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு இடம் இருக்கிறது. முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ. 1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது போன்று போலி இ-மெயில்கள் பல மாணவர்களுக்கு சென்றுள்ளது.

என்.ஆர்.ஐ. மாணவர்களை குறி வைத்து அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள் போலியானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News