தமிழ்நாடு

கடந்த 9 மாதத்தில் 46 கோடி பேர் பயணம்- தெற்கு ரெயில்வேயில் பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு

Published On 2023-01-10 04:22 GMT   |   Update On 2023-01-10 04:22 GMT
  • ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் 46 கோடியே 82 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
  • கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 22 கோடியே 56 லட்சமாக இருந்தது.

சென்னை:

தெற்கு ரெயில்வே ஒவ்வொரு அரையாண்டு மற்றும் நிதியாண்டில் முடிந்த 9 மாதங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை, சரக்குகள் கையாண்ட அளவு போன்றவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து உள்ளது. முன்பதிவு செய்த பயணிகள், முன்பதிவு இல்லாத பயணிகள், பயணிகள் ரெயில் மற்றும் பண்டிகைக் கால சிறப்பு ரெயில்கள் மின்சார ரெயில்கள் ஆகியவற்றின் மூலம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் 46 கோடியே 82 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 22 கோடியே 56 லட்சமாக இருந்தது. பயணிகள் மூலம் ரூ.4689 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

சரக்கு ரெயில்களை கையாண்டதன் மூலமும் வருவாய் அதிகரித்துள்ளது. 27.660 மில்லியன் எடையளவு கொண்ட சரக்குகள் இந்த 9 மாதத்தில் தெற்கு ரெயில்வே கையாண்டுள்ளது.

கடந்த ஆண்டு இது 21.757 மில்லியன் ஆக இருந்தது. கடந்த வருடத்தைவிட 27 சதவீதம் சரக்குகள் அதிகளவு கையாளப்பட்டுள்ளன.

சரக்குகள் அதிகளவில் கையாண்டதன் மூலம் ரூ.25659 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டில் கையாண்ட வருவாயைவிட ரூ.1989 கோடி அதிகமாகும்.

மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News