தமிழ்நாடு

வைகாசி விசாக திருவிழா- நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கம்

Published On 2022-06-12 05:20 GMT   |   Update On 2022-06-12 05:20 GMT
  • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
  • பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

நெல்லை:

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும். இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றது.

பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இவற்றில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Tags:    

Similar News