தமிழ்நாடு
குதிரையில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

போதைக்கு அடிமையாகாதீர்கள்- குதிரையில் வீதி வீதியாக சென்று போலீசார் விழிப்புணர்வு

Published On 2022-06-25 03:27 GMT   |   Update On 2022-06-25 03:28 GMT
  • போதைக்கு அடிமையாகாதீர்கள், உங்கள் பொன்னான வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்ற கோஷத்துடன் போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
  • போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உள்ளூர் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

கூடலூர்:

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாறு கிராம பஞ்சாயத்து, சுங்கத்துறை போலீசார் இணைந்து போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குதிரைகள் மீது ஏறி ஊர்வலமாக சென்ற போலீசார் போதைக்கு அடிமையாகாதீர்கள், உங்கள் பொன்னான வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தபால் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் நடித்து காட்டப்பட்டது.

போலீசாரின் இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உள்ளூர் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News