search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விழிப்புணர்வு"

    • போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தும் ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் போலீசார் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்ததில் போதைபொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

    மேலும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

    இதைபோல அவளூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சப்தகிரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போதைபொருட்கள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • காட்பாடி ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு
    • புகைப்ப டங்களை காட்டி விளக்கினர்

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவர் மீது ரெயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனை தொடர்ந்து தண்டவாள பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரெயில்வே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, வசந்தி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்மராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பள்ளிக்குப்பம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் ரெயில் தண்டவா ளங்களை கடந்த போது அடிபட்டு இறந்தவர்கள் புகைப்ப டங்களை காட்டி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அருகாமையில் உள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் தெரியாமல் ஆடு மாடுகளை தண்டவா ளப்பாதையில் மேய்ப்பது குற்றம்.

    தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக குழந்தைகள் கற்களை வைப்பது குற்றம் என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்- டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கை கள் குற்ற செயல்களிலும், சிலா் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.

    இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏ.எஸ்.பி. ஷ ஹ்னாஸ் முன்னிலை வகி த்தார். இதில் திருநங்கைகள் சிலர் குற்ற செயல்களிலும், சட்ட விரோத செய ல்களிலும் ஈடுபடுகின்றனர். இனி திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி னா்.

    மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அசோக், ஒருங்கி ணைப்பாளர் சந்தாதேவி ஆகியோர் பங்கேற்று திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து போலீசார் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண ப்படும் என உறுதியளி த்தனா்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம் மற்றும் திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்
    • உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை நெமிலி போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறியதாவது:- தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்ம கும்பல் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    வெளியூர்களுக்கு செல்லும்போது தங்கள் உறவினரிடம் அல்லது போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். இரவு நேரங்களில் பயணம் செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். பஸ்களில் பயணம் செய்யும்போது அறிமுகம் இல்லாத யாரிடமும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.

    உள்ளிட்டவை குறித்து போலீசார் பொதுமக்களிடையே துண்டு பிரசுரத்தை கொடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.

    • சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போலீசார் பற்றிய சரியான புரிந்துணர்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாணவிகளையும் சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டது. சூலூர் இன்ஸ்மாபெக்டர் தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் காவல் துறை அனைவரது நண்பன் என்றும், காவல்துறையை கண்டு தவறு செய்தவர்களே பயப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறினர்.

    மேலும் காவல்துறையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    காவல் நிலைய அலுவலக நிர்வாகம். வயர்லெஸ் கருவிகளின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு, தொலைத்தொடர்பு கருவிகளின் உபயோகம் மற்றும் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற கோரி போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்தனர்.

    தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்கி ஹெல்மெட் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வரும் நாட்களில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். இதுபோல் ஏராளமானவர்களை பிடித்து அறிவுறுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்ட போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    • கம்பைநல்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    மொரப்பூர்,

    மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், ஜெய்குமார்,செல்வி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கும்,காரில் சீட் பெல்ட்அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தும் தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின் பக்க சீட்டில் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிய வேண்டும், குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்,வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனவும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    • ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசா ணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் புதிய போக்கு வரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார் கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேக மாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் .

    அதே நேரத்தில் அதி வேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளி டம் எடுத்துக் கூறப்பட்டது.

    உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப் படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பாது காப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங் களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீசார் கூறுகையில் 'போக்குவரத்து விதிமுறை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகளை சோதனைச்சாவடிகளில் பிடித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் இன்னமும் புதிய கட்டணப்படி யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்து விரிவான அறிவுறுத்தல் வந்த பின் அறிவிப்பு வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.விதிமுறை பின்பற்றினால் அபராதம் குறித்த அச்சம் வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லை என்றனர்.

    • குழந்தை கடத்தல், பாலியல் சீண்டல் குறித்து விளக்கம்
    • உதவி எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் ரெயில் பயணிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் பயணிக்கும் பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரெயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில் உறங்கும் போதும் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் ரீதியாக சீண்டல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நீங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்

    இதற்காக ரெயில்வே நிர்வாகம் காவல் உதவி எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் ஓடும் ரெயில்களில் அல்லது பிளாட்பாரங்களில் இருக்கும் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொளப்படும்.

    அதே போன்று குழந்தை கடத்துதல், குழந்தை மாயமானதல், ரெயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில் தவறி விழந்து விடுதல் போன்ற தகவல்கள் தெரிவிக்க குழந்தை உதவி எண்:1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பணத்தை பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்து விளக்கம்
    • சட்டவிரோத செயல்களை தடுக்க ரோந்து பணி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு, பணம் கொள்ளை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் சந்தைக்கோடியூர் பகுதியில் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை மொபட்டில் வைத்துவிட்டு துணி கடைக்கு சென்ற ஒருவம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கண்காணித்து நூதனமாக கொள்ளையடித்துச் சென்றனர்.

    வங்கிக்கு வரும் பொது மக்களை மர்ம நபர்கள் கண்காணித்து அவர்கள் எடுத்துச் செல்லும் பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்வதால் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தேசிய உடமை யாக்கப்பட்ட வங்கியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் வங்கி வாடிக்கையாளர் களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

    அரவேனு

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு கோத்தகிரி போலீஸ் நிலையம் சார்பில் போக்சோ சட்டம் மற்றும் போதை பொருட்கள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்ர் சேகர் மற்றும் போலீசார் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, சமூக வலைதளங்களை மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போலீசார் வழங்கினர். இதில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். 

    • போதைக்கு அடிமையாகாதீர்கள், உங்கள் பொன்னான வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்ற கோஷத்துடன் போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
    • போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உள்ளூர் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாறு கிராம பஞ்சாயத்து, சுங்கத்துறை போலீசார் இணைந்து போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக குதிரைகள் மீது ஏறி ஊர்வலமாக சென்ற போலீசார் போதைக்கு அடிமையாகாதீர்கள், உங்கள் பொன்னான வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தபால் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் நடித்து காட்டப்பட்டது.

    போலீசாரின் இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உள்ளூர் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    ×