தமிழ்நாடு

பிரதமர் மோடி

சதுரங்க வல்லபநாதர் கோயில் வரலாறை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

Published On 2022-07-28 22:43 GMT   |   Update On 2022-07-28 22:43 GMT
  • நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
  • அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் தொடர்புள்ளது என்றார்.

சென்னை:

நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் தொடர்புள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பல விளையாட்டு போட்டிகளைக் குறிப்பதாகவே உள்ளன. தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது ஆகும். இங்கு இறைவன் அரசியுடன் செஸ் விளையாடினார் என்பது ஐதீகம் என தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் என்ற கிராமத்தில் சதுரங்க வல்லப நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,500 ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கோயிலின் வரலாற்றை வைத்து சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என அறியப்படுகிறது.

Tags:    

Similar News