தமிழ்நாடு

நீர்பிடிப்பில் மழை குறைந்ததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

Published On 2022-07-25 05:10 GMT   |   Update On 2022-07-25 05:10 GMT
  • கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
  • வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது.

கூடலூர்:

152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 வாரமாக கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீாமட்டம் 135.90 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 136 அடியை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் சரிய தொடங்கியது.

அதன் பிறகு குறிப்பிடத்தக்க மழைபொழிவு இல்லை. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 134.35 அடியாக உள்ளது. நீர்வரத்து 1168 கனஅடி, திறப்பு 1972 கனஅடி, இருப்பு 5715 மி.கனஅடி.

வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது. வரத்து 1750 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3931 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடி, வரத்து 21 கனஅடி, திறப்பு 10 கனஅடி, இருப்பு 335 மி.கனஅடி.

சோத்துப்பாறை நீர்மட்டம் 70.53 அடி, திறப்பு 3 கனஅடி.

Tags:    

Similar News