தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்காவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

திருச்சி, சிதம்பரத்தில் சுற்றுலா அலுவலகம்-தங்கும் விடுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2022-09-27 10:29 GMT   |   Update On 2022-09-27 10:29 GMT
  • கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.
  • கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர்.

சென்னை:

ஆண்டுதோறும் திருச்சிக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில், தமிழ்நாடு ஓட்டலில் 4 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சுமார் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 நபர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்ச்சுகீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறிகண்ட வள்ளலார் பிறந்த வடலூர் போன்ற இடங்களுக்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

இதன்மூலம், கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இவ்வலுவலத்தின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

மதுரை மாநகர், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ப் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தலமாகும்.

இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். இத்தர்காவிற்கு வருகை புரியும் புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் 1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக் கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News