தமிழ்நாடு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

ரம்ஜான் பண்டிகை எதிரொலி- செஞ்சி வாரச்சந்தையில் ரூ.4 கோடி ஆடுகள் விற்பனை

Published On 2022-04-29 04:09 GMT   |   Update On 2022-04-29 04:09 GMT
ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஆடு விற்பனை கூடுதலாக நடைபெற்றது. கிராமங்களிலிருந்து விவசாயிகள் அதிகாலையிலேயே ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் சென்னை, புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வழக்கமாக ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அதன்படி இன்று ஆட்டு சந்தை கூடியது. ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஆடு விற்பனை கூடுதலாக நடைபெற்றது. கிராமங்களிலிருந்து விவசாயிகள் அதிகாலையிலேயே ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு என விற்பனைக்கு வந்தனர். இந்த ஆடுகளை வியாபாரிகள் லாரி மற்றும் வேன்களில் வந்தவர்கள் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.

இன்று மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News