தமிழ்நாடு
கி வீரமணி

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கவர்னர் செயல்படுகிறார்- கி.வீரமணி

Published On 2022-04-07 08:14 GMT   |   Update On 2022-04-07 08:14 GMT
ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது இதுவே முதல்முறையாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
தேனி:

தேனி பங்களா மேட்டில் திராவிடர் கழகம் சார்பில் நீட் எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அரசுக்கு சட்ட பூர்வமான உரிமை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த அதிகாரம் அவருக்கு கிடையாது. ஆனால் சட்டமன்றத்தில் 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்த பிறகும், அதையும் கிடப்பில் போட்டுள்ளார். இதன் மூலம் கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்.

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்படும் கவர்னர் ரவியை திரும்ப பெறவேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டனர். வரலாற்றில் முதன்முறையாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது இதுவே முதல்முறையாகும்.

அதன் பிறகாவது ஆளுநர் தனது கடமையை முறையாக செய்ய வேண்டும். ஆனால் இன்னும் அவர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் உள்ளார். இவ்விஷயத்தில் தமிழக அரசு போதிய அழுத்தம் தரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

அவர் துணை முதல்வராக இருந்தபோது எந்தவிதமான அழுத்தத்தை கொடுத்தார் என்பது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு மேல் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் தோளில் ஏறி அமர்ந்துதான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News