தமிழ்நாடு
தண்ணீர்பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தபோது எடுத்த படம்.

சொத்து வரியை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2022-04-02 10:32 GMT   |   Update On 2022-04-02 10:32 GMT
சொத்து வரியை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்,
ஆத்தூர்:

ஆத்தூர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

பின்பு அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

 அ.தி.மு.க. அரசு இருந்தபோது வீட்டு வரி சொத்து வரி உயர்த்தப் படவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் திட்டமிட்டு வீட்டு வரி, சொத்து வரிகளை 105 சதவீதம் உயர்த்தி இருக்கிறது . இது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

 மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது சொத்து வரியை மக்களை சொத்தை பறிக்கும் வரியா? என அவர் கூறினார். தற்பொழுது இந்த வார்த்தையை அவருக்கு சொன்னால் பொருத்தமாக இருக்கும். இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த போதைப்பொருள் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  காவல் துறையை வைத்திருக்கின்ற முதல்&அமைச்சர் மெத்தனப் போக்கில் இருப்பதால் போதை பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. அ.தி.மு.க. அரசு அடிமை அரசாக இருக்கிறது,  டெல்லிக்கு காவடி தூக்குவது என்று ஸ்டாலின் அவர்கள் கூறினார்.

 இப்போது அவர் டெல்லி சென்று பிரதமரை பார்த்து இருக்கிறார், பாதுகாப்புத் துறை மந்திரியை பார்த்து இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.   இந்திய நாட்டின் பிரதமர் தமிழகத்திற்கு வரும் பொழுது கோபேக் மோடி என்று ஆர்ப்பாட்டம் செய்தார். இன்றைக்கு அவரை போய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு முறை சந்தித்து இருக்கிறார்.


அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகம் வளர்ச்சிப் பாதை கொண்டு செல்ல உழைத்தோம் அதனால் நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. நாங்கள் சென்று பார்த்தால் காவடி தூக்கியதாக  கூறியவர்கள் இப்போது எந்த காவடியை தூக்கி கொண்டு செல்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News