தமிழ்நாடு
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக்குளம் சுற்றுச்சுவர் இடிந்த இடத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்

திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா- அமைச்சர் சேகர்பாபு பாத தரிசனம்

Published On 2021-12-20 08:27 GMT   |   Update On 2021-12-20 08:35 GMT
தியாகராஜசாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கும் பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும் தீபாராதனை நிகழ்வும் நடைபெற்றது.
திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலில் தியாகராஜசாமி தரிசனம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திருவாதிரை திருவிழாவையொட்டி இன்று தியாகராஜசாமி பாத தரிசனம் காலை முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜசாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தியாகராஜசாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கும் பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும் தீபாராதனை நிகழ்வும் நடைபெற்றது.

தொடர்ந்து நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜர் சிவகாமி அம்மன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது.



இவ்விழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த பாத தரிசன நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளத்தில் மழையால் சுவர் இடிந்த பகுதிகளை பார்வையிட்டு புதிதாக சுற்றுச் சுவர் எழுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News