செய்திகள்
கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும், கஞ்சா மூட்டைகளையும் காணலாம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2021-11-05 07:31 GMT   |   Update On 2021-11-05 07:31 GMT
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.

இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News