செய்திகள்
தடுப்பூசி

சென்னையில், கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதள வசதி

Published On 2021-06-25 02:23 GMT   |   Update On 2021-06-25 02:23 GMT
புதிய இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினை தேர்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ‘சென்னை இன்னோவேஷன் ஹப்’ சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினை தேர்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், என்ற 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய இணையதள வசதி தொடக்க விழா சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த வசதியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News