செய்திகள்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்

ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது

Published On 2021-06-10 08:10 GMT   |   Update On 2021-06-10 08:10 GMT
கடந்த வாரத்தில் மட்டும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 1070 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை ரெயில்வே போலீசார் தொடர்ந்து கண்காணித்து மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் வழியாக நெல்லை, தூத்துக்குடிக்கு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தினந்தோறும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்ஸ்பெக்டர் அருண்ஜெயபால் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 1070 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சோதனையில் ஈடுபட்டபோது 83 மதுபாட்டில்களை துணிப்பைக்குள் மறைத்து 3 பேர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை கடத்தி வந்த கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்த முரளிதரன்(50), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(52), வாடிப்பட்டி தென்கரையை சேர்ந்த அமர்நாத்(28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News